எனது கவிதைகள் எழுத்துலக வித்தகர்கள் மத்தியில் வெறும் கிறுக்கல்கள் என அறிந்தும், ஆர்வ மிகுதியால் நான் படைத்த கிறுக்கல்கள் இதோ உங்கள் விமர்சனத்திற்காக....
இறை வாழ்த்து:
உலக மறிவதற் கரியவனே
என்னை உலகறியச் செய்தவனே
கலைகள்தனை அறிவிக்கும் ஆசானே
அம்மையாகி அப்பனாகி ஆசானகி
எள்ளளவும் என்னை விட்டு நீங்காத
நிமலவனே- உன் தாள்தனை வணங்கி
என்பணியைத் துவங்குகிறேன்!
-என்றும் உன் சேவையில்
ச.பாபு சுபாஷ் சந்தர்.
யார் தெய்வம்:
விபரம் தெரியுமுன் அம்மா யாரென்று தெரிந்து கொண்டேன்
விபரம் தெரிந்தபின் அப்பா யாரென்று தெரிந்து கொண்டேன்
விபரம் தரும்கல்வி கற்றபின்தான் தெரிந்து கொண்டேன்
கல்விதரும் ஆசான் தான் தெய்வம் என்று!
பட்டாம் பூச்சிகள்:
கனவுகளாய் இரவெல்லாம்
மனதினிலே நிறைந்தவைகள்
நனவாக நேரினிலே
நின்றிடவே நெஞ்சமெல்லாம்
சிறகடிக்கும் ஆயிரமாய்ப்
பட்டாம் பூச்சிகள்.
நட்பு:
நட்பு- அது சோற்றுக்கு
போடும் உப்பு போன்றது-
நம் வாழ்வில் தினமும்
சேர்கின்றவொன்று.
நட்பு- அது சுவாசிக்கும்
உயிர்க் காற்றைப் போன்றது-
நமது வாழ்வே அதனால்
இயங்குகிறது.
நட்பு- அது உடலோடு
ஒட்டிநிற்கும் உயிர் போன்றது-
நம் வாழ்வில் வாழ
உதவுவது.
நட்பென்னும் மூன்றெழுத்து
நம் வாழ்வின்
வெற்றியென்னும் மூன்றெழுத்து.
எறும்புகள்-Erumbugal
- A DEBATE IN PUDUCHERRY
- Why has the Tamil world NOT produced a quantum….?
- பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’
- நாமார்க்குங் குடியல்லோம்(No one is subject to anyone)
- Durga is Sumero Dravidian
- ‘என்னக்கென்ன?’
- LACK OF POLITICAL WILL OF THE UNION GOVERNMENT DEPRIVED TAMILS OF CAUVERY WATERS FOR DECADES
- மூக்கறுப்பு யுத்தம்
- [agathiyar] Samana Vs Ajivaka
- Muruga

