தமிழரின் திருப்புமுனை

காதலும்..... காமமும்.....!

வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....

முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.

நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.

மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்
முதல் முறை என் காலடியில்
தரிசனம் தந்த காவல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
வலை போட்டு விட்டாய்.

கடுங் குளிரில்.....
காம நிலையில்
முதல் முறை என் போர்வைக்குள்
ஆட்சி செய்த அதிபதியே - என்
முழு இதயத்தையும்
சிறைப் பிடித்து விட்டாய்.

கடற்கரை மண்ணில்.....
கண்ட புதுமை
முதல் முறை என் பார்வையில்
பாதம் பதித்திட்ட பாவையே - என்
முழு இதயத்தையும்
திருடி விட்டாய்.

உங்கள் அபிசேகா.

 #

கவிதை மிகவும் நன்றாக உள்ளது அபிசேகா!

தினமலர் தமிழ் புத்தகங்கள்

 

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's new

  • sharmi16
  • avmvijay
  • gingeehussain
  • sathisrsd
  • ereklyAltep

Who's online

There are currently 0 users and 21 guests online.

Syndicate

Syndicate content